நம்மைப்பற்றி
சிங்கப்பூர் தமிழர் இயக்கம் 1954ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 25ம் நாள் தோற்றுவிக்கப்பட்டது. இந்த இயக்கம் பதிவு செய்யப்பட்டு 2014ம் ஆண்டுடன் 60 ஆண்டுகள் ஆகிறது. ஆண்டுதோறும், நாட்டு நாள் விழாவை மிகவும் சிறப்பாக கொண்டாடுதல், முதியோர் இல்லம் சென்று வருதல், இரத்த தானம் செய்தல், மற்ற அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பித்தல், ஆகியவை இயக்கத்தின் முக்கிய செயல்பாடுகளாகும்.
“அண்ணா இல்லம்” மூன்று மாடி கட்டிடம் 1996ம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்டு, 1998ம் ஆண்டு ஜூலை திங்கள் 25ம் நாள் திறப்பு விழா செய்யப்பட்டது. இந்த கட்டிடம் அப்போதைய பொதுச்செயலாளரும் முன்னாள் ஆலோசகர் மான திரு ரெ வேலாயுதம் அவர்கள் முயற்சியில், அப்போதைய பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் கட்டி முடிக்கப்பட்டது.
சிங்கப்பூர் தமிழர் இயக்கத்தின் 60 வது ஆண்டு விழா 2015 ஆம் ஆண்டு மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது .