|
நோக்கங்களும், குறிக்கோள்களும்
அ) சிங்கப்பூரில் வாழும் தமிழ் மக்கள் அனைவரிடத்தும் சாதி, சமய, கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட ஓர் ஒற்றுமை உணர்வை உருவாக்கல்
ஆ) சிங்கப்பூரில் வாழும் பல்வேறு சமூகங்களுடன் கூடி வாழ்ந்து ஒரே சிங்கப்பூரை உருவாக்கப் பாடுபடுதல்
இ) சிங்கப்பூர் மக்களிடையே தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்க தமிழர் இயக்கத்தின் முழு ஆற்றலையும் பயன்படுத்தல்
ஈ) இலக்கியம், இசை, நாடகம், விளையாட்டு போன்ற சமுதாயப் பண்பாட்டு நடவடிக்கைகளைப் பெருக்குதல்,
உ) தொழிற்கல்வி, முதியோர் வகுப்புகள், சொற்பயிற்சி வகுப்புகள், நூல் நிலையம் ஆகியவற்றை ஏற்பாடு செய்து நடத்துதல். நாள், வாரம், மாத இருமுறை, மாத அடிப்படையில் இதழ்களை வெளியிடுதல்,
ஊ) சிங்கப்பூரில் பயன்மிகு சமுகநலச் செலவுகளுக்கு உதவிபுரியும் பொருட்டு இயக்க உறுபினர்களிடம் நிதி திரட்டுதல்
எ) சிங்கப்பூரில் வாழும் தமிழர் அனைவரையும் சிங்கப்பூர் நாட்டின் மீது பற்றும் விசுவாசமும் கொள்ளத் தூண்டுதல், நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபடவும் அவர்களை ஒன்று திரட்டுதல்
ஏ) அரசியல், தொழிற்சங்க அமைப்புகளைத் தவிர, சிங்கப்பூரின் தேசிய நலனுக்குப் பாடுபடும் எந்த அமைப்புக்கும் ஆதரவளித்தல்
|
|