போட்டியின் பெயர் :பாலர் பள்ளி 1 - வார்த்தை விளையாட்டு
போட்டி விவரங்கள்
1) போட்டி நாள்: 09 மார்ச் 2024 மதியம் 2 மணி முதல் 5 மணி வரை.
2)இடம்: சிங்கப்பூர் தமிழர் இயக்கம், 35A நோரிஸ் சாலை, சிங்கப்பூர் -208277
3)போட்டி நாளன்று போட்டியாளர்கள் பள்ளி சீருடையில் பங்கேற்க வேண்டும்.
4) (இ, ஈ) (க. கா) (உ. ஊ) (எ, ஏ) (ச,சா) (த, தா) (ந, நா) (சி, சீ) (ம, மா) (ஒ ,ஓ )
ஆகிய மேற்கண்ட 10 வகை எழுத்துக்களில் ஏதேனும் ஒரு வகை எழுத்துக்கள் மட்டும் போட்டியன்று கொடுக்கப்படும். ஒரு போட்டியாளருக்கு ஒருவகை எழுத்து வீதம் பத்து வகை எழுத்துக்களும் பத்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டு போட்டி தனி அறையில் நடத்தப்படும்.அந்த தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துக்களில் துவங்கும் வார்த்தைகளை கூற வேண்டும்.
உதாரணம் : ( அ ,ஆ ) அம்மா ,அறிவு, ஆடு ,ஆசை ,அன்பு ,ஆற்றல் ...... etc .... (அ, ஆ) வகை எழுத்துக்கள் போட்டியில் இடம் பெறாது)
எண்கள் சம்மந்தப்பட்ட வார்த்தைகள் சொல்லக்கூடாது.
உதாரணம் : (இருபது, இருபத்தி ஓன்று ... etc)
மாணவர்கள் தங்கள் எழுத்துக்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்த பிறகு , பெற்றோர்கள் போட்டியாளர்களுக்கு பயிற்சி கொடுக்க போட்டி அறையில் 5 நிமிடம் வழங்கப்படும். பயிற்சிக்கு பின் போட்டி அறையில் மாணவர்கள் பயிற்சி தாளை வைத்துக்கொள்ள கூடாது.
5) போட்டி கால அளவு: அதிகபட்சம் 2 நிமிடங்கள்
6)போட்டி முடிவுகள் 25 மார்ச் 2024 அன்று சிங்கப்பூர் தமிழர் இயக்க இணையத்தளத்திலும், முகப்பக்கத்திலும் அறிவிக்கப்படும்.
|