போட்டியின் பெயர் :பாலர் பள்ளி 1 - சொல் விளையாட்டு
போட்டி விவரங்கள்
1) போட்டி நாள்: 22 மார்ச் 2025 காலை 10.30 மணி
2)இடம்: சிங்கப்பூர் தமிழர் இயக்கம், 35A நோரிஸ் சாலை, சிங்கப்பூர் -208277
3)போட்டி நாளன்று போட்டியாளர்கள் பள்ளி சீருடையில் பங்கேற்க வேண்டும்.
4) (இ, ஈ) (கி, கீ) (உ. ஊ) (எ, ஏ) (ச,சா) (த, தா) (கு,கூ) (ப,பா) (ம, மா) (ஒ ,ஓ )
ஆகிய மேற்கண்ட 10 வகை எழுத்துக்களில் ஏதேனும் ஒரு வகை எழுத்துக்கள் மட்டும் போட்டியன்று கொடுக்கப்படும். . ஒரு போட்டியாளருக்கு ஒருவகை எழுத்து வழங்கப்படும். போட்டியாளர்கள் தேர்ந்தெடுத்த எழுத்துக்களில் துவங்கும் சொற்களை கூற வேண்டும்.
உதாரணம் : ( அ ,ஆ ) அம்மா ,அறிவு, ஆடு ,ஆசை ,அன்பு ,ஆற்றல் ...... etc .... (அ, ஆ) வகை எழுத்துக்கள் போட்டியில் இடம் பெறாது)
எண்கள் சம்மந்தப்பட்ட சொற்களை சொல்லக்கூடாது. உதாரணம் : (இருபது, இருபத்தி ஒன்று ... etc) மாணவர்கள் தங்கள் எழுத்துக்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்த பிறகு , பெற்றோர்கள் போட்டியாளர்களுக்கு பயிற்சி கொடுக்க போட்டி அறையில் 5 நிமிடம் வழங்கப்படும். பயிற்சிக்கு பின் போட்டி அறையில் மாணவர்கள் பயிற்சி தாளை வைத்துக்கொள்ள கூடாது.
5) போட்டி கால அளவு: அதிகபட்சம் 90 வினாடிகள்
|